வெளிமாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி: 1 கிலோ 120 ரூபாய் வரை விலை போவதால் மீனவர்கள் மகிழ்ச்சி…

3 September 2020, 6:23 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் அதிகமாக பிடிபட்ட மத்தி மீன்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி தொடங்கிய நிலையில் 1கிலோ 120 ரூபாய் வரை விலை போவதால் மீனவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள் தோறும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.கடந்த 5 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் மற்றும் தொற்று காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இந்நிலையில் தற்போதைய தளர்வுகளை அடுத்து வெளி மாநில வியாபாரிகள் ஏற்மதிக்காக மீன்களை வாங்க குவிந்து வருகின்றனர்.இதனால் வழக்கம் போல் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இன்று அதிக அளவில் மத்திமீன்கள் கிடைத்துள்ளது. இவை ஏற்றுமதிக்கு உகந்த மீன் என்பதால் வியாபாரிகள் மீன்களின் தரத்தை பொருத்து 100 முதல் 120 வரை விலை கொடுத்து வாங்கினர். 50 ரூ விற்ற மத்தி மீன் 120 வரை விலை போவதால் பழையார் மீனவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Views: - 8

0

0