மருந்தகம் நடத்தி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Author: Udhayakumar Raman
16 October 2021, 3:54 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மருந்தகம் நடத்தி போலியாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பி.எஸ்.சி வரை மட்டுமே படித்திருந்த நிலையில் பூண்டி பஜாரில் ஸ்ரீ மருந்தகம் நடத்தி போலியாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அவரது உத்தரவில் புல்லரம்பாக்கம் காவல்துறையினர் போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இவர் ஏற்கனவே சுகாதார துறையினரால் போலி மருத்துவர் என கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆமீண்டும் மருத்துவம் பார்த்து சிக்கியுள்ளார் அவரை விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 100

0

0