மது பாட்டில்கள் கடத்திய நான்கு பேரை கைது: 1134 மது பாட்டில்கள் பறிமுதல்

Author: kavin kumar
2 October 2021, 2:54 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே போலியான பதிவெண் பொருத்தி மது பாட்டில்கள் கடத்திய கார் மற்றும்1134 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்து அதிக அளவில் மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,இந்நிலையில், இன்று உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி தலைமையில் போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு என்ற போலியான பதிவு எண்களை பொருத்தப்பட்டு புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்க்கு தேர்தலுக்காக மது பாட்டில்களைஎடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பன், அந்துவான்பிரகாஷ் என்பவரையும் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களை வாங்குவதற்காக வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன், ராஜ்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்கள் கடத்திவரப்பட்ட 28 பெட்டிகளில் 1134 மது பாட்டில்கள் மற்றும் கார் மற்றும் டாட்டா ஏசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Views: - 163

0

0