சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேட்டி…

27 August 2020, 6:19 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் இம்மாவட்டத்திற்கு வருகை புரிவதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என கொரோனா விழிப்புணர்ச்சி கலை நிகழ்ச்சிக்கு பின் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உதகை சேரிங் கிராஸ் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மற்றும் கொரோனோ தடுப்பு சிறப்பு அதிகாரி சுப்ரியா சாஹு உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் படி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுநாள் வரை 250 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களில் தற்போது, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சைக்காக மேலும் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தற்போது தமிழக அரசு இ பாஸ் பதிவு செய்யும் முறையில், அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் வழங்க அறிவித்திருந்தது. குறிப்பாக தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருப்பதால், உதகையில் அடுத்த மாதம் இரண்டாம் சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழக அரசு தான் இம்மாவட்டத்திற்கான நடைமுறைகளை முடிவெடுக்கும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Views: - 1

0

0