திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம்

Author: kavin kumar
17 February 2022, 3:34 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து, கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு கூடிய பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதேபோல் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் மாசி மக விழா நடைபெற்றது.

Views: - 566

0

0