முக்கொம்பு மேலனை தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என் நேரு

Author: Udhayakumar Raman
23 July 2021, 3:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை தமிழக நகர் வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் மாத்திற்குள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டங்கள் முடிவடையும்.கொரோனோ காரணமாக முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை மட்டுமல்ல பல்வேறு இடங்களில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. முக்கொம்பை பொறுத்த வரை ஒரு தடுப்பனை – பராமரிப்பு பணிகள் முடிவடைந்து எந்நேரமும் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இல்லை.

ஆனால் மேட்டூர் அணையை பொருத்த வரை 24 மணி நேரமும் அதிகாரிகளால் கன்கானிப்பில் இருக்கும் – அது எந்த அரசாக இருந்தாலும் சரி. கல்லனையில் தடுப்பனை கட்ட கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. குளித்தலை மற்றும் மருதூரில் இருந்து ஒரு தடுப்பனை கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வன உயிரியல் பூங்கா கொண்டு வர ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கம்பரசம்பேட்டையில் தடுப்பனை கட்ட வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் என்னுடைய எண்ணம் – பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை அமைத்து நீர்வளத்தை பெருக்குவதே இந்த அரசின் எண்ணமாக உள்ளது.

ஆய்வின்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ,முசிறி சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் , மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் மற்றும் சர்.ஏடி பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கட்டிவரும் மணிமண்டபம் பணிகளை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

Views: - 121

0

0