முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

8 February 2021, 7:29 pm
Quick Share

மதுரை : மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி விளக்கில் முன்விரோதம் காரணமாக கொட்டகுடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது அண்ணன் மகனான திவாகர் என்பவர் படுகாயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை சம்பவம் தொடர்பாக மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் உயிரிழந்த ராமச்சந்திரனின் உடலினை மேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று மேலூர் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Views: - 1

0

0