முதல் தொண்டன் உசிலம்பட்டியில் இருக்கிறான்.. எதுக்கும் அஞ்ச மாட்டேன் ; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

Author: Babu Lakshmanan
16 March 2023, 5:12 pm
Quick Share

எங்கள் உட்கட்சி விவகாரம் குறித்து பேசி பேசி அழுத்து போய்விட்டது என்றும், கையாளாகதவர்களால் இன்று ஆட்சியை இழந்து நடுத் தெருவில் நிற்பதாக உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுகவின் உறுப்பினர் அடையாள படிவத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியதாவது :- திமுக அரசு பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடுத்துள்ளது. நாங்கள் வழிகாட்டும் எங்களை வழிநடத்தும் ஒரு தலைவர் மீது அவதூறு வழக்கு என்றால் மௌன விரதமா இருக்க முடியும். கைகளை கட்டிக் கொண்டு மௌன விரதம் இருக்க, நாங்கள் புளு பூச்சிகள் இல்லை. தன்மானமுள்ள தொண்டர்கள், தலைமையை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் கொடுங்கோள் ஆட்சியை எதிர்த்து எந்த தியாகத்தையும் செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினோம்.

இன்று அதற்கும் புகார் அளித்துள்ளனர் திமுகவினர். அதற்கெல்லாம் அஞ்சபோவதில்லை, உதயக்குமார் அதற்காக பிணையும் கேட்கமாட்டான். உண்மையை சொல்வதில் என்ன தவறு உள்ளது என பேசினார்.

தொடர்ந்து, சர்வாதிகாரம் இந்த தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என்று சொன்னால், அதை தட்டிக் கேட்கும் பொறுப்பும், கடமையும் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு பொதுமக்களும் உண்டு. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அஞ்ச போவதுமில்லை, அடக்குமுறையை தட்டிக் கேட்கும் முதல் தொண்டன் உசிலம்பட்டியில் இருக்கிறான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், என பேசினார்.

தொடர்ந்து, இன்னும் காலம் கடந்துவிடவில்லை, எடப்பாடி பழனிச்சாமி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நீங்கள் போட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்குங்கள். அது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் காலம் மாறும், ஆட்சி மாறும். இப்போது உங்கள் கையில் உள்ள காவல்துறை எங்கள் காவல்துறையாக மாறும். பழைய வரலாறுகள் உங்களுக்கு தெரியும். அதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விடுத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடுவீர்கள் என்றால், அதே உங்களுக்கு திரும்புகிற காலம் வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார். வழக்கை பார்த்து கொள்வார்.

வெறும் 43 தொகுதியில் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்கு இரட்டை இலைக்கு மாறியிருந்தால் தலையெழுத்தே மாறியிருக்கும். அது எங்கள் உட்கட்சி விவகாரம் அதை பேசி பேசி அழுத்து போய்விட்டது. கையாளாகாதவர்களால் இன்று ஆட்சியை இழந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறோம், என பேசினார்.

Views: - 429

0

0