நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

9 November 2020, 10:14 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிருஷ்ணபாளயத்தை சேர்தவர் கேசவன் தாய், தந்தை இழந்த கேசவன் தனது சகோதரியுடன் தனிமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கேசவனுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள  ஒரு ஏக்கர் நிலத்தினை அப்பகுதியை சேர்ந்த 11 பேர் போலியாக அவர்களின் பெயர்களுக்கு பத்திரப் பதிவு செய்து அவர்களை அங்கு இருந்து விரட்ட மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து கடந்த ஆண்டு டிச., 7_ம் தேதி கேசவன் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அந்த நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இதே போல காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, திருமணம் ஆகாதவர். இவருடன் பிறந்த சகோதர்கள் மூன்று பேரும் தந்தையின் பெயரில் உள்ள 13 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்காமல், அடியாட்களை வைத்து கொலை செய்ய முயற்சிப்பதாகக்கூறி இவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்வதாகக்கூறி கத்திடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறித்துச் சென்றனர். இவர்கள் இருவரின் மனுக்களையும் விசாரித்த டி.ஆர்.ஓ., சாந்தி, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுக்களை அனுப்பி வைத்தார்.

Views: - 19

0

0