கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்: தடுப்பணை மீதிருந்து கீழே குதித்து இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்கள்

Author: Udhayakumar Raman
20 October 2021, 5:56 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆபத்தை உணராமல் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீரில் தடுப்பணை மீதிருந்து கீழே குதித்தும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் ஆற்றில் செல்வதை பொருத்து பொருட்படுத்தாமல் ராஜபாளையம் தரைப்பாலத்திற்கு கீழேயும் புதிதாக கட்டப்பட்ட திருக்கண்டலம் தடுப்பணையில் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் அதில் குதித்து குளித்து வருகின்றனர். மேலும் தாமரைப்பாக்கம் தடுப்பணை கொசஸ்தலை ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழிகிறது. இதில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரியவர்கள் சிறியவர்கள் என தடுப்பணை பகுதியில் வெள்ளநீரில் மோட்டார்சைக்கிளில் சாக விளையாட்டும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் ஒருவரும் இங்கு பணியில் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தடுப்பணைகளில் இறங்கி குளித்தும் வருகின்றனர். ஏற்கனவே பல உயிர் பலிகளை வாங்கியுள்ள இந்த பகுதிகளில் ஒருவர்கூட பாதுகாப்பிற்கு இல்லாததும் இங்கு பொதுப்பணித்துறையினர் உரிய முறையில் பணியில் இல்லாமல் இருப்பதால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அஜாக்கிரதையாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

Views: - 59

0

0