இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ஆறு பேர் பலியான பரிதாபம்..!

12 April 2021, 12:22 pm
earthquake_jakarta_updatenews360
Quick Share

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ரிக்டர் அளவுகோளில் 6.1 எனும் அளவில் தாக்கிய பூகம்பத்தால் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லுமஜாங், மலாங், பிளிட்டர், ஜெம்பர், ட்ரெங்கலெக் மற்றும் பிளிட்டர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1,189 வீடுகள் பூகம்பத்தால் இடிந்து விழுந்துள்ளதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்தார்.

சுகாதார மையங்கள், கல்வி வசதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் போன்ற நூற்றுக்கணக்கான பொது கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூகம்பத்தால் வீடிழந்தவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் தளவாட வசதிகள் அரசால் நிறுவப்பட்டுள்ளன. அரிசி, துரித உணவு மற்றும் நூடுல்ஸ் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாகாண நிர்வாகத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மலாங் மாவட்டத்தின் கெபன்ஜென் நகரிலிருந்து தெற்கே 96 கி.மீ தொலைவிலும், கடற்பரப்பின் கீழ் 80 கி.மீ ஆழத்திலும் மையப்பகுதியுடன் தாக்கியதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தோனேசியா செர்ஜா புயலால் பாதிக்கப்பட்டு 167 பேர் பலியாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு இயற்கைப் பேரழிவு ஏற்பட்டுள்ளது மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 51

0

0