இலங்கை சிறையில் கலவரம்: 8 கைதிகள் சுட்டுக்கொலை…!!

30 November 2020, 1:30 pm
srilanka jail - updatenews360
Quick Share

கொழும்பு: இலங்கை சிறையில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இலங்கை கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் அங்குள்ள இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர். கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவானது.

இதனால், கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க, பல கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை சிறை காவலர்கள் அடக்க முற்பட்டனர். அது கைதிகள் மற்றும் காவலர்கள் கலவரமாக மாறியது.

இது கடுமையான வன்முறையாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை பாதுகாப்பிற்காக தொடர்ந்து அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 0

0

0