மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் பாய்ந்து விபத்து…!!

31 October 2020, 5:39 pm
mecca - updatenews360
Quick Share

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள மசூதிக்குள் கார் ஒன்று அதிவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெக்கா: சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பெரிய மசூதி அருகே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென மசூதிக்குள் பாய்ந்து நுழைவு வாயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் மசூதிக்கு விரைந்ததாக மெக்கா பிராந்திய ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் அல்-தோசாரி கூறியுள்ளார். காரை மோதி விபத்து ஏற்படுத்திய நபரை சவுதி அரேபியாவின் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

courtasy

Views: - 16

0

0