அமெரிக்க விமானத்தில் நடுவானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் பலர் வெளிநாடுகளுக்கும் தப்பித்து வருகின்றனர்.அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக ஆப்கான் மக்களை காபூலில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.காபூல் விமான நிலையத்திற்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க போவதில்லை என்று தாலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து விமான நிலையத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரீச் 828 என்ற எண் கொண்ட அமெரிக்க சி-17 ரக ராணுவ விமானத்தில் வெளியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அந்த விமானம் அமெரிக்கா சென்று அடைந்தவுடன் தாயும் குழந்தையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைக்குழந்தைக்கு உதவிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் நடைபெற்ற பிரசவம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
0
0