ஆப்கானிஸ்தான் விவகாரம்: வரும் 26ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

Author: kavin kumar
23 August 2021, 10:31 pm
Quick Share

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக வரும் 26ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க, வரும் 26ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது தொடர்பான கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடுவார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 558

1

0