அமேசானின் ஜெஃப் பெசோஸ் முதல் விண்வெளிப் பயணம் : 4 பேருடன் வெற்றிகரமாக திரும்பினார்!!

20 July 2021, 7:29 pm
Space Success -Updatenews360
Quick Share

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உள்பட ப்ளூ ஆர்ஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் New Shepard ராக்கெட் மூலம் விண்வெளி சென்று தரையிறங்கினர்.

உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலம் மூலம் விண்வெளிக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்புயுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து New Shepard ராக்கெட் மூலம் அபுறப்பட்ட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் சுமார் 7 நிமிடங்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Views: - 156

0

0