மீண்டும் இந்து கோவில் இடிப்பு..! பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் அட்டூழியம்..!

By: Sekar
11 October 2020, 5:44 pm
Imran_Khan_updatenews360
Quick Share

பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் அண்மையில் இந்து கோவிலுக்கு நேர்ந்த கதியைக் கண்டித்து, லண்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கான நீதிக்கான செய்தித் தொடர்பாளருமான அனிலா குல்சார், பாகிஸ்தானில் மொத்தமிருந்த 428 கோவில்களில் தற்போது 20 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கூறினார்.

“அக்டோபர் 10’ஆம் தேதி பாடின் சிந்து பாகிஸ்தானில் ஸ்ரீ ராம் மந்திர் மீது செய்யப்பட்ட கொடூரமான காழ்ப்புணர்ச்சியை நான் கடுமையாக கண்டிக்கிறேன். 428’இல், 20 மந்திர்கள் மட்டுமே சிந்தில் எஞ்சியுள்ளன” என்று குல்சார் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையின்படி, சிந்துவின் பாடின் மாகாணத்தின் காரியோ கன்வார் பகுதியில் நேற்று ஒரு இந்து கோவில் அழிக்கப்பட்டது. இது பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மோசமான நிலைமைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். ஆனால் இந்து கோவில்களுக்கு எதிராக எதிராக நடக்கும் அட்டூழியங்கள் பலமுறை செய்திகளாக வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை அடுத்து இந்து சமூகம் கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

சிறுபான்மை இந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சிந்து பிராந்தியமானது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் அல்லது இந்து சிறுமிகளை வலுக்கட்டாயமாக மாற்றுவது தொடர்ச்சியாக நடக்கும் குற்றங்களாகும். இதை கண்டும் காணாமல் பாகிஸ்தான் ராணுவமும் அரசும், மறைமுகமாக ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அதன் மத சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டி வருகிறது. இது பல்வேறு வகையான இலக்கு வன்முறைகள், வெகுஜன கொலைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், கடத்தல், கற்பழிப்பு, கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாறுதல் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அகமதியர்கள் மற்றும் ஷியாக்கள் மீது பாகிஸ்தானில் தொடர்ந்து துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 47

0

0