பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான மசூதிகள் மூடல்..! ஆஸ்திரியா அதிரடி அறிவிப்பு..!

7 November 2020, 8:55 pm
Austria_Sebastian_Kurz_UpdateNews360
Quick Share

தலைநகர் வியன்னாவில் இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இரண்டு மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடு பல தசாப்தங்களில் ஆஸ்திரியாவின் முதல் பெரிய தாக்குதலாகும். இதில் ஒரு ஜிகாதி மட்டும் ஈடுபட்டதாக முதலில் குற்றம் சாட்டப்பட்டது. அவர் பின்னர் போலீசாரால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஆஸ்திரியாவின் அமைச்சர் சூசேன் ராப் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அரசாங்கத்தின் மத விவகார அலுவலகம் திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து, இரண்டு வியன்னா மசூதிகளுக்கு பலமுறை சென்று வந்ததை உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக கூறினார்.

இரண்டு மசூதிகள் வியன்னாவின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. ஒன்று ஒட்டாக்ரிங் மாவட்டத்தில் மெலிட் இப்ராஹிம் மசூதி என்றும் மற்றொன்று மீட்லிங் பகுதியில் உள்ள தெவ்ஹிட் மசூதி என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்திரியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பு இந்த மசூதிகளுக்கு சென்று வந்ததன் மூலமாகத்தான் தாக்குதல் நடத்தியவரிடம் பயங்கரவாத எண்ணங்கள் அதிகரித்தது கண்டறிந்துள்ளது என்று ராப் கூறினார்.

மேலும் இந்த இரு மசூதிகளில் ஒன்று மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என ராப் கூறினார்.

ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மத சமூகத்தின் ஒரு அறிக்கை, மதக் கோட்பாடு மற்றும் அதன் அரசியலமைப்பு பற்றிய விதிகளையும், இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தேசிய சட்டங்களையும் மீறியதால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரு மசூதி மூடப்படுவதாகக் கூறியது.

இதற்கிடையே தாக்குதலுக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 43

0

0

1 thought on “பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான மசூதிகள் மூடல்..! ஆஸ்திரியா அதிரடி அறிவிப்பு..!

Comments are closed.