கற்பழிப்புப் குற்றங்களுக்கு இனி மரண தண்டனை தான் தீர்வு..! பங்களாதேஷ் அரசு புதிய சட்டம்..!

By: Sekar
12 October 2020, 5:24 pm
Rape_Bangaladesh_Protest_UpdateNews360
Quick Share

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான திட்டத்திற்கு பங்களாதேஷ் அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு கொள்கை அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது என்று நாட்டின் சட்ட அமைச்சர் அன்சுல் ஹுக் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அதிகபட்ச தண்டனையாக மாற்றப்படுவதாக அவர் கூறினார்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத் விரைவில் கற்பழிப்பாளர்களின் தண்டனையை தற்போதுள்ள ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக மாற்றும் அவசர சட்டம் ஒன்றை அறிவிப்பார் என அன்சுல் ஹுக் மேலும் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டங்களில் விரைவான திருத்தங்களைச் செய்வதற்கான திட்டத்தை அவர்கள் அமைச்சரவை முன் வைத்ததாக ஹுக் மேலும் கூறினார்.

அண்மையில் தொடர்ச்சியான பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாடு தழுவிய கோபத்தை அடுத்து, சட்டத்தை மாற்றுவதன் மூலம் குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையை ஏற்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

Views: - 44

0

0