கொரோனா பரவலை தடுக்க தவறியது ட்ரம்ப் அரசுக்கு தோல்வி: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களின் காரசார விவாதம்..!!

Author: Aarthi
8 October 2020, 9:44 am
kamala harris - updatenews360
Quick Share

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கமலா ஹாரிசும், மைக் பென்சும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும், மைக் பென்சும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவதாம் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிசும், மைக் பென்சும் பங்கேற்றனர்.

விவாதத்தில் பேசிய கமலா ஹாரிஸ், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரவல் பற்றி தெரிந்தும் தடுக்க தவறியது அதிபர் ட்ரம்ப் அரசுக்கு மிகப்பெரிய தோல்வி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வரை, கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரு திட்டமும் ட்ரம்ப் அரசுக்கு இல்லை என்றும் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர் வேட்பாளர் மைக் பென்ஸ் தனது விவாதத்தில், சீனா உலகிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் சீனாவுக்கு விமானப் போக்குவரத்தை அரசு தடை செய்தபோது அதனை ஜோ பைடன் எதிர்த்ததாகவும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

Views: - 39

0

0