Liftல் வரும் போது பெண் செய்த அநாகரீகமான செயல்..!(வீடியோ)

13 February 2020, 8:09 pm
Spit in Escalator- updatenews360
Quick Share

சுத்தம் சோறு போடும் என்ற ஒரு பழமொழி எல்லாரும் அறிந்த ஒன்று தான். புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்’ என்றார் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதில் உடல் சுத்தமல்லாது சுற்றுச்சூழலின் சுத்தத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

எதற்கு இந்த குறள் என்று யோசிக்க வேண்டாம் நண்பர்களே. குறிப்பிட்ட ஒரு வீடியோவில் பெண் செய்த இழிவான செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவில் liftல் வரும் ஒரு பெண், தான் போக வேண்டிய தளத்திற்கு எந்த பொத்தானோ அதை அழுத்துகிறார். ஆனால் அவர் விவரமாக அங்குள்ள tissue paper எடுத்து பட்டனை அழுத்துகிறார்.

பின்னர் தனது உமிழ்நீரை துப்பிக் கொண்டே வருகிறார். அது என்ன எச்சில் துப்பும் இடமா என நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அந்த பெண் லிப்டில் இருக்கும் போது மற்ற ஒரு பெண் வருகிறார். அவர் போக வேண்டிய தளத்திற்கு தனது வெறும் கையால் அந்த பட்டனை அழுத்துகிறார்.

இது எவ்வளவு ஒரு கீழ்தரமான செயல், இப்படி சுகாதாரமாக செயல்பட்டால் ஏன் நோய் வராது, அந்த பெண்ணை தொடர்ந்து மற்றொரு ஆணும் வருகிறார். பிறகு அவர்கள் இறங்கியதும், மீண்டும் எச்சில் துப்பும் அந்த பெண் அவருடைய தளத்திற்கு போவதற்காக மட்டும் விபரமாக செய்படுகிறார். தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?