கொரோனாவால் மீண்டும் அதிகரித்த பலி : பிரான்ஸில் டிச.,வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு

14 November 2020, 6:42 am
Cbe Corona Gents - Updatenews360
Quick Share

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் டிச., வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் கொத்து கொத்தாக பலியாகி வந்தனர். ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளினால் தொற்று பரவலும், பலி எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் நாளொன்றுக்கு 500 பேர் வீதம் பலியாகி வந்தனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் டிசம்பர் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் இணைந்து முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பிரான்சில் நேற்று வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளும், பலி எண்ணிக்கை 42 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

1 thought on “கொரோனாவால் மீண்டும் அதிகரித்த பலி : பிரான்ஸில் டிச.,வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு

Comments are closed.