குருநானக் பிறந்த நாள்: சீக்கியர்களுக்கு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வாழ்த்து…!!

1 December 2020, 7:55 am
Quick Share

வாஷிங்டன்: சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன், துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் சீக்கிய மதகுருவான குருநானக் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு கூட்டறிக்கை வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

சீக்கிய மதத்தினை தோற்றுவித்த குருநானக் தேவ்ஜியின் பிறந்த நாளை கடைப்பிடிக்கும் அமெரிக்கா மற்றும் உலகமெங்கும் உள்ள நம்முடைய சீக்கிய நண்பர்களுக்கு நாங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். சீக்கியர்களின் போராட்டத்தில் அனைத்து வயதுடையோரும் அமைதியான முறையில் பேரணியாக செல்லும் நிகழ்வை நாங்கள் பார்க்கிறோம்.

இந்நாளில், குருநானக்கின் காலத்திற்கும் மாறாத மற்றும் உலகளாவிய செய்தியான இரக்கம் மற்றும் ஒற்றுமையை நாம் அனைவரும் நினைவுகூர்வோம். அவை நமக்கு ஊக்கம் அளிப்பதுடன், மக்களுக்கு ஏற்பட்டுள்ள போராட்ட வலி குறைய உதவுவதுடன், நாட்டில் போராட்டம் முடிவுக்கு வருவதற்கும் உதவும் என தெரிவித்து உள்ளனர்.

Views: - 0

0

0