‘எனக்கும் ட்ரீட்மெண்ட் பண்ணுங்க டாக்டர்’: மருத்துவமனைக்கு வந்த காயமடைந்த மான்…!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
18 November 2021, 1:09 pm
Quick Share

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கும், இங்குமாக ஓடி போக்கு காட்டிய மான் ஒன்றின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. குழந்தைகள் செய்யும் குறும்புகள், செல்லப்பிராணிகளின் சேட்டைகள் என பல வீடியோக்கள் நம்மை சிரிக்க வைத்தாலும், விபத்துக்கள் போன்ற வீடியோக்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன.

அந்த வகையில் தற்போது ஒரு மானின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. ஒரு மருத்துவமனையில் வைக்கப்படுள்ள சிசிடிவி கேமராவில் ஒரு வினோத நிகழ்வு பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த மான் ஒன்று வழுக்கும் வகையில் உள்ள ஃப்ளோரில் தடுமாறி இரண்டாவது மாடிக்கு எஸ்கலேட்டரில் மான் ஏறிச் செல்கிறது. இதை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன.

இந்த வினோதமான காட்சியைப் பார்த்து அங்கிருக்கும் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். மான் இரண்டாவது மாடியை அடைந்த பிறகு, அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் அதை ஒரு வழியாக பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அந்த மான் பின்னர் மருத்துவமனை படுக்கையில் வைக்கப்பட்டு, லூசியானா வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறையிலிருந்து வந்த ஒரு டிரக்கில் கொண்டு செல்லப்படுகின்றது.

அந்த அமைப்பில் அந்த மானுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது காயத்தை சரி செய்து கொள்ள வேகமாக மருத்துவமனைக்கு ஓடி வந்து எஸ்கலேட்டரில் அசால்டாய் பயணித்த இந்த மான் இணையத்தில் வெகுவாக கவனம் ஈர்த்து வருகிறது.

காயம் பட்டால் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்துள்ள இந்த மான் புத்திசாலிதான் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 532

0

0