முடிவுக்கு வரும் டிரம்ப் சகாப்தம்..? பெரும்பான்மைக்கு அருகில் ஜோ பிடென்..!

5 November 2020, 1:18 pm
trump_biden_updatenews360
Quick Share

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையை அடைவதற்குத் தேவையான 270 வாக்குகளுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகக் கூறியுள்ள டொனால்டு டிரம்ப் சட்டப்போராட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்தாலும், ஜனநாயக கட்சியினர் அதை கேலி செய்து வருகின்றனர். மோசடி குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தேர்தலின் முடிவை மாற்றுவதற்கு டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சி தோல்வியில் தான் முடியும் எனக் கூறப்படுகிறது. 

டிரம்ப் பிரச்சாரக் குழு உச்சநீதிமன்றத்தில் பென்சில்வேனியா வழக்கில் தலையிட முயல்கிறது. இது தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பு வரை பெறப்பட்ட வாக்குகளை கணக்கிட முடியுமா என்று துணை பிரச்சார மேலாளர் ஜஸ்டின் கிளார்க் கேள்வியெழுப்பியுள்ளார். டிரம்ப்பின் பிரச்சாரக் குழு விஸ்கான்சினிலும் வாக்கு எண்ணிக்கையில் மறுபரிசீலனை கேட்கும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே பிடென் அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடர வேண்டும் என்று கூறினார். “மேலும் யாரும் எங்கள் ஜனநாயகத்தை எங்களிடமிருந்து பறிக்க முடியாது.” என டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில் அதற்கான நேரம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு, முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், தொற்றுநோய் அச்சத்தால் அதிக அஞ்சல் ஓட்டுக்களைக் கொண்டிருப்பதால் எண்ணுவதற்கு கால தாமதம் ஆகி வருவதாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் சட்டரீதியான போராட்டத்திற்கு தயாராகி வருவதால் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த அதிபர் பதவியேற்பதற்குள் அமெரிக்கா பல அதிரடிகளைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 21

0

0

1 thought on “முடிவுக்கு வரும் டிரம்ப் சகாப்தம்..? பெரும்பான்மைக்கு அருகில் ஜோ பிடென்..!

Comments are closed.