நாயுடன் விளையாடியபோது ஜோ பைடனுக்கு காலில் சுளுக்கு: விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து…!!

30 November 2020, 3:45 pm
joeee - updatenews360
Quick Share

வாஷிங்டன்: ஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது வலது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப் பணிகளை தொடங்கி உள்ளார். தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், பைடன் சனிக்கிழமை தனது வீட்டில் செல்லப்பிராணியான ‘மேஜர்’ என்ற நாயுடன் விளையாடியபோது அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பைடன் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவரது வலது காலின் நடுவில் இரண்டு சிறிய எலும்புகளில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் டாக்டர் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என அதிபர் ட்ரம்ப் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0