வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்..! அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..!
20 January 2021, 11:09 pmஅமெரிக்காவின் 49’வது துணை அதிபராக இந்திய வம்சாவளியும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பதவியேற்றார்.
இதன் மூலம் அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி மற்றும் கறுப்பின துணை அதிபர் என்றும் சிறப்பை பெற்றுள்ளதோடு, துணை பதிவராக பதவியேற்கும் முதல் பெண் எனும் சிறப்பையும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஜனவரி 20’ஆம் தேதியான இன்று அமெரிக்க மரபுப்படி, உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்.
அவருக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது ஆணையாக அமெரிக்காவின் அரசியல் சாசனங்களை மதித்து செயல்படுவேன் என பதவிப்பிரமாணத்தின் போது கமலா ஹாரிஸ் உறுதியளித்தார்.
இதற்கிடையே கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில், கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
0
0