இனி பிரிட்டன் நாணயங்களிலும் மகாத்மா காந்தி..! இந்த சிறப்பைப் பெரும் முதல் வெள்ளையினம் அல்லாதவர்..!

2 August 2020, 2:20 pm
mahatma_gandhi_UpdateNews360
Quick Share

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரிட்டன் ஒரு நாணயத்தை புதிதாக வெளியிட உள்ளது. சிறுபான்மையினரின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கான அழைப்புகளுக்கு மத்தியில் இங்கிலாந்து கருவூலம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. 1987 முதல் இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் இடம் பிடித்த மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளை அல்லாத மனிதர் ஆவார்.

மகாத்மா காந்தி இடம்பெறும் ஒரு நாணயத்தை உருவாக்க ராயல் மிண்ட் ஆலோசனைக் குழு செயல்பட்டு வருகிறது.

பிரிட்டனின் நிதியமைச்சர் ரிஷி சுனக், கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன தலைவர்கள் நாணயங்களில் இடம்பெறுவது குறித்து “அவர்களின் பங்களிப்பை பிரிட்டன் அங்கீகரிக்க வேண்டும்.” என்று சுனக் கூறினார்.

சிறுபான்மை இன மக்கள் நாணயத்தில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ‘வீ டூ பில்ட் பிரிட்டன்’ பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜெஹ்ரா ஜைடிக்கு எழுதிய கடிதத்தில் சுனக், “கருப்பு, ஆசிய மற்றும் பிற இன சிறுபான்மை சமூகங்கள் பிரிட்டனின் பகிரப்பட்ட வரலாற்றில் ஆழ்ந்த பங்களிப்பு கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்..

ராயல் மிண்ட்ஆலோசனைக் குழு என்பது மாஸ்டர் ஆஃப் தி மிண்ட் என்ற வகையில் நிதியமைச்சருக்கு நாணயங்களின் வடிவமைப்புகளை பரிந்துரைக்கும் நிபுணர்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற குழுவாகும்.

Views: - 17

0

0