பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்..! ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம்..!

Author: Sekar
9 October 2020, 10:39 am
PoK_protest_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீரின் ஒரு அங்கமான கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, அரசு இயந்திரம் உள்ளூர் மக்களின் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

“அரசு நிர்வாகம் மற்றும் சீருடை அனிந்த ராணுவம் இந்த விதி மீறலுக்குப் பின்னால் உள்ளது” என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். அரசியல் தலைவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீதிகளில் இறங்குவதை காட்சிகள் காண்பித்தன.

ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவிய தளங்களில் மனித உரிமைகளின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய முயற்சிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளது. 

சுதந்திரத்தின் போது அந்த நாட்டில் சிறுபான்மையினர் 23 சதவீதத்திலிருந்து இப்போது வெறும் மூன்று நான்கு சதவீதமாக எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா ஆதாரப்பூர்வமாக வீழ்த்தியுள்ளது.

மிக சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு பதிலளித்த இந்தியா, “பாகிஸ்தானின் அரசியலமைப்பு என்று அழைக்கப்படுவதன் கீழ் பாகிஸ்தானில் மிகவும் துன்புறுத்தப்பட்ட சமூகமாக அகமதியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களில் அதிகபட்சம் பாகிஸ்தானில் வன்முறை மரணங்களுக்கு ஆளாகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளது.

Views: - 46

0

0