ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்..! இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு..!

10 September 2020, 6:16 pm
S_Jaishankar_SCO_UpdateNews360
Quick Share

ரஷ்ய தலைநகரில் நடைபெற்ற எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதிகள் 2001’இல் ஷாங்காயில் நடத்திய ஒரு உச்சிமாநாட்டில் எஸ்சிஓ நிறுவப்பட்டது.

2005’ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் குழுமத்தின் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டன. இரு நாடுகளும் 2017’ஆம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டன.  

கடந்த வாரம் எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதோடு, சீன பாதுகாப்பு அமைச்சரை தனியாக சந்தித்து லடாக் மோதல் குறித்து விவாதித்தார். இந்நிலையில் தற்போது எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

“ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை முறையாக தொடங்கி வைத்தபோது, “ஜெய்சங்கர் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குழு புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

எட்டு நாடுகளின் குழுவில் முழு உறுப்பினராக இந்தியா கலந்து கொண்ட மூன்றாவது எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.

“இந்த ஆண்டு ரஷ்ய கூட்டமைப்பின் தலைமையின் கீழ் பல்வேறு எஸ்சிஓ கூட்டங்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது. எஸ்சிஓ உச்சி மாநாடு விரைவில் நடைபெறும்” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் புதுடெல்லியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் தற்போது நடைபெறும் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் எதிர்வரும் எஸ்சிஓ உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யும். மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொள்ளும்.

எஸ்சிஓ சந்திப்பின் ஒரு பக்கமாக, ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் செல்வாக்கு செலுத்தும் எஸ்சிஓ அமைப்பில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. அவை முக்கியமாக பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன.

Views: - 0

0

0