மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயற்சி: ரஷ்யா, வடகொரியா மீது மைக்ரோசாப்ட் குற்றச்சாட்டு…!!

14 November 2020, 9:30 am
Microsoft to soon launch an antivirus app for Android, iOS platforms
Quick Share

ரஷ்யா மற்றும் வடகொரியா நாடுகள் மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் குற்றம்சாட்டியுள்ளது.

உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை ரஷ்யா, வடகொரியாவை சேர்ந்த அரசு ஆதரவுடைய ஹேக்கர்கள் திருட முயன்றதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த ஹேக்கிங் முயற்சியில் பெரும்பாலனவை தோல்வி அடைந்துள்ளது.

ஆனால் எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது, அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நடந்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 29

0

0