உணவுத் தட்டுப்பாடு..! இறைச்சியாகும் வளர்ப்பு நாய்கள்..! வடகொரிய அதிபர் பகீர் உத்தரவு..!

19 August 2020, 11:27 pm
Kim_Jong-Un_UpdateNews360
Quick Share

நாய்கள், குறிப்பாக செல்ல நாய்கள், அவை சொந்தமான வீடுகளில் குடும்ப உறுப்பினர் போல பாவிக்கப்படுகிறது. ஆனால் வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோன் உங்கிற்கு அது தெரியவில்லை போலும். அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் மூலம் வட கொரியா உணவு வழங்கல் நெருக்கடியை எதிர்கொள்வதால் அதன் சர்ச்சைக்குரிய தலைவர் தனது செல்ல நாய்களை ஒப்படைக்குமாறு தனது மக்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவை உணவகங்களுக்கு இறைச்சியாக மாற்றப்படலாம்.

நியூசிலாந்து ஹெரால்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, நாட்டில் பொருளாதார நிலைமை நொறுங்கி வருவதாலும், உணவு பற்றாக்குறை ஆகிவிட்டதாலும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுகிறது.

ஏழைகளிடம் கால்நடைகள், பணக்காரர்களிடம் செல்ல நாய்கள் :

கிம் ஜாங்-உன் சாதாரண மற்றும் ஏழை வர்க்கத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதாகத் தெரிகிறது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பன்றிகள் மற்றும் பிற கால்நடைகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் பொதுவாக செல்வந்தர்கள் நாய்கள் உட்பட வளர்ப்பு செல்லப்பிராணிகளை பராமரிக்கின்றனர். இந்த செல்லப்பிராணி உரிமையை வட கொரிய அதிகாரிகள் முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளமாகக் கருதுகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

தென் கொரியாவின் சோசுன் இல்போ செய்தித்தாள் படி, கிம் செல்ல நாய்களின் உரிமையை தடைசெய்ததாகவும், ஜூலை மாதம் வீட்டில் ஒரு நாய் இருப்பதை முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு மோசமான போக்கு என்று கண்டனம் செய்ததாகவும் ஒரு ஆதாரம் தெரிவித்தது.

அடையாளம் காணப்பட்ட செல்ல நாய்களுடன் கூடிய வீடுகள்:

“செல்லப்பிராணி நாய்களுடன் உள்ள வீடுகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவற்றைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள் அல்லது பலவந்தமாக அவற்றை பறிமுதல் செய்கிறார்கள்” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது. “சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்படுகின்றன அல்லது நாய் இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுகின்றன.” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி உரிமையாளர்கள் கிம் ஜாங்-உனை அவரது முதுகுக்குப் பின்னால் சபிக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்கள் செய்யக்கூடியது மிகக் குறைவு என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

நாய் இறைச்சி, கொரியாவில் சுவையானது:

தென் கொரியாவில் நாய்களை உண்ணும் பாரம்பரியம் படிப்படியாக மறைந்து வருகின்ற போதிலும், கொரிய தீபகற்பத்தில் நாய் இறைச்சி நீண்ட காலமாக ஒரு சுவையான அசைவ உணவாக கருதப்படுகிறது. ஆனால் அது பண்ணைகளில் தொடர்ந்து வாழ்வதால் அது ஒரு இறந்த பாரம்பரியம் அல்ல. தென்கொரியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பண்ணைகளில் 1 மில்லியன் நாய்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

அண்மையில் ஐ.நா. அறிக்கை ஒன்று, வட கொரியாவின் 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீத மக்கள் பரவலான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் எனக் கூறியுள்ளது. இது அணுசக்தி ஏவுகணை திட்டங்களுக்காக ஆட்சிக்கு விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளால் மோசமடைந்துள்ளது.

மேலும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல் பயிர்கள் சேதமடைந்து, கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிக்கச் செய்துள்ளது.

சீனாவும் வெள்ளம், வறட்சி, ஆரம்பகால கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது:

வட கொரியின் நட்பு நாடான சீனாவிலும் இதேபோன்ற உணவு பற்றாக்குறை பிரச்சினை உள்ளது. சீன துணை பிரதமர் ஹு சுன்ஹுவா சமீபத்தில் சீனாவின் ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநர்களிடமும் இந்த ஆண்டு பயிர் விளைச்சலைக் குறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்

வெள்ளம், வறட்சி மற்றும் வெட்டுக்கிளி தாக்குதல்கள் சீனா முழுவதும் பயிர்களை அழிக்க காரணமாகின்றன.

Views: - 41

0

0