‘பெய்ரூட் வெடிவிபத்து’ சேதமடைந்த இடங்களின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது நாசா..!

11 August 2020, 1:46 pm
Quick Share

லெபனான் தலைநகர் பெய்ரூடில் நிகழ்ந்த அதிபயங்கர வெடிவிபத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் கடந்த 4-ஆம் தேதி, பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 160 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில், வெடி விபத்து நடப்பதற்கு முன்பும், அதற்கு பின்பும் உள்ள பெய்ரூடின் செயற்கைக்கோள் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவின் அட்வான்சேட் ரேபிட் இமேஜிங் அண்ட் அனாலிசிஸ் குழு சிங்கப்பூர் ஆய்வகத்துடன் இணைந்து, செயற்கைக்கோள் ரேடார் தரவுகளை பகுப்பாய்வு செய்து வரைபடம் வெளியிட்டுள்ளது.

அங்குள்ள துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிவப்பு நிறம், கடுமையான சேதத்தை குறிப்பதாகவும், வரை படம் மூலம் மக்களுக்கு உதவி தேவைப்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Views: - 12

0

0