நியூயார்க்கை புரட்டி போட்ட ‘இடா’ புயல்: அவசர நிலை பிரகடனம் அமல்…வீட்டினுள் முடங்கிய மக்கள்..!!

Author: Aarthi Sivakumar
2 September 2021, 6:29 pm
Quick Share

வெலிங்டன்: அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயலால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயலால் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியால் தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்து உள்ளன. நியூயார்க் நகரின் ஆளுகையின் கீழ் வரும் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்துள்ளார்.

latest tamil news

இதையடுத்து, நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் அவசர அறிவிப்பு அமைப்பு டுவிட்டர் பக்கத்தில், ‘மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். பலத்த காற்றால் சிதைந்த பொருள்கள் பறந்துவந்த மக்களை தாக்க வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு கீழ் தளங்களில் இருங்கள். ஜன்னல் அருகே நிற்க வேண்டாம்’ என பதிவிடப்பட்டு உள்ளது.

Views: - 339

1

0