நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை: அறிக்கை தாக்கல் செய்த வடகொரியா..!!

23 June 2021, 10:25 am
North_Korea_UpdateNews360
Quick Share

சியோல்: நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை சமர்பித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் வடகொரியா, தங்கள் நாட்டில் கடந்த 10ம் தேதி வரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொண்டவர்களில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Views: - 190

0

0