கோமாவுக்கு சென்ற வடகொரிய அதிபர் : சகோதரிக்கு சென்ற ஆட்சி பொறுப்பு!!

24 August 2020, 7:40 pm
Kim - Updatenews360
Quick Share

சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் கோமா நிலையில் இருப்பதால் அவரின் பொறுப்பை அவரது சகோதிரியிடம் ஒப்படைக்கபப்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்க் உன் மீது எழுந்தன. அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, அவருக்கு கொரோனா என பல்வேறு ஊகங்கள் கூற்றி வந்தன.

இந்த நிலையில் அவர் உடல்நிலை குறித்து அவ்வப்போது செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. இதையெல்லாம் தவிடுபொடியாக்கிய கிம் ஜாங்க் உன் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.

அதிகார பொறுப்பில் உள்ள கிம் ஜாங் உன், தனது சகோதரியான கிம் யோ ஜாங்கிற்கு முக்கிய பொறுப்ப வகிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் கிம் ஜாங் உன் கோமா நிலையில் உள்ளதாக அவரின் முக்கிய பொறுப்புகள் எல்லாம் அவரது சகோதரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து தென்கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், தற்போதைய நிலவரப்படி வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0