தீபாவளியை கொண்டாடிய கனடா பிரதமர் : காணொலியில் தீபம் ஏற்றி வாழ்த்து!!

14 November 2020, 1:44 pm
Canada PM - Updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ காணொலி காட்சி மூலமாக தீபாவளி கொண்டாடினார். தனது அலுவலகத்தில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடிய அவருடன் காணொலி வாயிலாக அரசியல் தலைவர்கள் இணைந்து கொண்டாடினர்.

இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் உண்மை ஒளி மற்றும் நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது என ஜஸ்டின் ட்ரூட்டோ பதிவிட்டுள்ளார். முக்கிய பண்டிகையான தீபாவளியை கொண்டாட காணொலியில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 25

0

0