டி-ஷர்ட்டால் முளைத்த புதிய சிக்கல்..! கனடாவுடன் மோதும் சீனா..!

2 February 2021, 9:12 pm
Justin_Trudeau_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ்  பாதிப்பை உலகிற்கு அளித்ததாக சீனாவை கேலி செய்யும் வகையில், கனடாவின் பெய்ஜிங் தூதரக ஊழியர்களில் ஒருவர் ஆர்டர் செய்த டி-ஷர்ட்டுகள் தொடர்பாக கனடாவுக்கு முறையான புகார் அளித்ததாக சீனா தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து சீனாவுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கனடாவை கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கனடா தூதரகத்தின் ஊழியர் ஒருவர் வௌவால் படத்துடன் கூடிய டி-ஷர்ட்களை ஆர்டர் செய்ததாக ஒரு டி-ஷர்ட் தயாரிப்பாளர் சீன இணையத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. 

சீனாவில் வைரஸ் வெளவால்களிலிருந்து உருவாகி பின்னர் வுஹான் நகரில் மனிதர்களுக்கு பரவியது என்ற குற்றச்சாட்டுகளை இது குறிப்பிடுவதாகத் தோன்றியது. அங்கு 2019;ஆம் ஆண்டின் இறுதியில் நோய்த்தொற்றுகள் முதன்முதலில் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த டி-ஷர்ட் நியூயார்க் ஹிப்-ஹாப் குழுவான வு டாங் கிலேனை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டால் மன்னிப்புக் கோருவதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் அரசாங்கம் தொற்றுநோய்களுக்கான ஆதாரமாக இருந்தது மற்றும் வுஹானில் முதன்முதலில் பாதிப்புகள் பதிவாகியிருந்தபோது விரைவாக பதிலளிக்கத் தவறியது என்ற குற்றச்சாட்டுகளை உலக அளவில் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த கோடை காலத்தில் டி-ஷர்ட்கள் ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஏதேனும் புழக்கத்தில் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான தகவல் தொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் உயர் நிர்வாகியை கனடா விடுவிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையின் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான உறவு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Views: - 14

0

0

1 thought on “டி-ஷர்ட்டால் முளைத்த புதிய சிக்கல்..! கனடாவுடன் மோதும் சீனா..!

Comments are closed.