ஆப்கன் அதிபர் மாளிகையில் தலிபான் டான்ஸ்… ஆட்சியைக் கைப்பற்றியதை கொண்டாடிய வீடியோ வைரல்…!!
Author: Babu Lakshmanan17 August 2021, 9:46 am
ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில், அந்நாட்டு அதிபர் மாளிகையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் படிப்படியாக அமெரிக்கா ராணுவம் தனது படைகளை குறைத்து வரும் நிலையில், அந்நாட்டின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள், எந்தவித எதிர்ப்பும் இன்றி தலிபான்களிடம் சரணடைந்து விட்டனர். மேலும், பெரும்பாலானோர் அருகே உள்ள உஸ்பெகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்து விட்டனர். இதனால், நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர்.
இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
மேலும், அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றியுள்ளனர். அதேவேளையில், இடைக்கால ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார்பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தநிலையில், ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியதை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
0
0