ஆப்கன் முன்னாள் அதிபரை சந்தித்த தலிபான்கள்!

Author: kavin kumar
18 August 2021, 9:34 pm
Quick Share

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைபற்றியதையடுத்து, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். பூமியில் ரத்தக்களறி நடக்கக் கூடாது என்பதற்காகவே ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதேசமயம், புதிய அரசை அமைக்கவும் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான் அமைப்பின் முக்கிய பிரிவாக ஹக்கானி பயங்கரவாத குழு உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.இந்த சந்திப்பின்போது, ஆப்கன் அரசின் முன்னாள் அமைதிக்கான தூதர் அப்துல்லாவும் உடனிருந்தார். ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தலிபான்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Views: - 236

0

0