14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து, வானில் பீட்சா சாப்பிட்ட சாப்பாட்டு ராமர்கள்!

2 March 2021, 8:56 am
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை டைவர்கள் 3 பேர், வானிலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து, தரையை நோக்கி வரும்போது, மார்கெரிட்டா பீட்சா சாப்பிட்டனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

உலகில் உணவு பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான துரித உணவு பீட்ஸா. உயரமான பகுதிகளில் உணவு சாப்பிடும் மக்களை விடுங்கள்.. அதுவே வானில் இருந்து குதித்து பூமி நோக்கி வரும் போது, உணவு சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள்.. முடியுமா.. சாத்தியமா என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை டைவர்கள் அது சாத்தியம் தான் என உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

டெக்சாஸை சேர்ந்த ஸ்கை டைவர் லோரி படலோகோ, தனது 3 நண்பர்களுடன் வானில் விமானத்திலிருநு்த 14 ஆயிரம் அடி உயர்த்திலிருந்து குதித்தனர். அதில் இருவர், மார்கெரிட்டா பீட்ஸா பாக்ஸை பிடித்துக் கொள்ள, மற்றொருவர் வந்து அவர்களுடன் இணைகிறார். பின் பாக்ஸை திறந்து, சாப்பிட துவங்குகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில், அதில் ஒரே ஒரு துண்டு பீட்ஸா மட்டுமே சாப்பிட முடியாமல் தவறி கீழே விழுகிறது. மற்ற அனைத்து துண்டுகளையும், இவர்கள் வானிலிலிருந்து பூமிக்கு பயணித்த போதே சாப்பிட்டு முடித்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய படலோகோ, ‘நான் செய்த மிகப்பெரிய சாதனை இது. மிகவும் உற்சாகமாக இதனை செய்து முடித்தோம். வானில் பீட்ஸாவை சாப்பிடுவது, தரையில் சாப்பிடுவதை சிறப்பாக இருந்தது’ என்றார். ஹெல்மெட் கேமராவில் தங்களது இந்த செயலை அவர்கள் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாகி உள்ளது.

Views: - 7

0

0