ஏஆர் ரஹ்மான் எல்லாம் லைன்ல நிக்கணுமாம்! இசைக்கருவியை உருவாக்கி இசைக்கும் அதிசய பறவை!

22 January 2021, 8:59 am
Quick Share

ஆஸ்திரேலியாவில் காணப்படும் கருப்பு பனை காகடூ என்ற பறவையினத்தில், பெண் பறவையை கவர, ஆண் பறவை இசைக்கருவியை தானாக உருவாக்கி அதனை இசைக்கும். இந்த அதிசய பறவை குறித்து நீங்கள் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.

உலகம் பல விந்தையான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஐந்தறிவு மிருக இனங்களில் பலவும் நம்மை விட புத்திசாலிகளாக நடந்து கொள்வது உண்மையில் பேரதிசயம். இன்ஜினியரிங் படிக்காமல், அழகாக கூடு கட்டும் பறவைகள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது அதற்கும் மேல்..

ஆம், இந்த பறவையினம், இசைக்கருவிகளை உருவாக்கி தானாகவே இசைக்கக் கூடியவை. மரக்குச்சிகளை உடைத்து, அதனை இசைக்கருவியாக மாற்றி, தனது பெண் இணையை கவர பாடி அழைக்கின்றன இந்த ஆண் பறவைகள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..!

இதுகுறித்து ஆஸ்திரேலிய பல்கலைகழகத்தை சேர்ந்த ராபர்ட் ஹெய்ன்சன் கூறியது: கருப்பு பனை காகடூ எனக்கு மிகவும் பிடித்த பறவை. தனது திறமையால் அது என்னை மயக்கிவிட்டது. இந்த அற்புதமான பறவையின் ஆண் இனங்கள், இசைக்கருவிகளை உருவாக்கி இசைக்கும். இந்த காகடூ பறவை, மனிதர்களை போன்ற குணாதிசயம் கொண்டது. அதுவே எனக்கு பிடித்து விட்டது.

இனப்பெருக்க காலத்தில் பெண் பறவைகளுக்காக, ஆண் பறவைகள் இசைக்கும். அது மரப்பட்டையை உறித்து அதில் பொந்து பறிக்கும். பின் ஒரு குச்சியை தனது காலில் எடுத்து மர பொந்தில் வாசிக்கும். அது ஒரு தேர்ந்த இசையாக இருக்கும். வேறு எந்த உயிரினமும் இவ்வாறு செய்யாது. பொதுவாக ஒரு விலங்கு இரையை தேடவே கருவியை உருவாக்கும். இந்த பறவை மட்டுமே அதில் விதிவிலக்கு. இது தனது பாலியல் ஆசையை வெளிப்படுத்த இசைக்கருவியை உருவாக்குகிறது.

இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், நியூ கினி தீவுகளிலும் காணப்படுகின்றன. அழிவின் விளிம்பில் இந்த பறவை இனங்கள் உள்ளன. பெண் பறவைகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. அதுவும் தப்பி பிழைப்பது பெரும் சிரமம். பிற உயிர்களுக்கு அவை இரையாகிவிடுகின்றன. ஒரு பறவை குஞ்சினை உருவாக்க, அதன் தாய்க்கு சராசரியாக 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் அதன் இனம் பெருக்கம் அடையாமலேயே உள்ளன. காட்டுத்தீயும் இந்த பறவைகளின் இருப்பிடத்தை அழித்து விடுகின்றது. அடுத்த 50 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும்.

Views: - 0

0

0