காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

23 February 2021, 9:10 am
kashmir train service - updatenews360
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன. காஷ்மீரின் ரயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

kashmir train - updatenews360

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ரயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் ரயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 65 சதவீத ரெயில் சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன.

இனி மேலும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0