நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை: 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதி..!!

5 March 2021, 9:19 am
earthquake newzland - updatenews360
Quick Share

வெலிங்டன்: நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான சக்த்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

யாரும் வீட்டில் தங்க வேண்டாம் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. காலை 8:28 மணிக்கு நியூசிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான சுனாமி வரலாம் மக்கள் இந்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்கள் கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அவசர சேவை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரே ரோசிக்னோல் அறிவித்து உள்ளார். நான்காவது பெரிய பூகம்பம் இன்று காலை நியூசிலாந்தை உலுக்கியது, வட தீவின் கடற்கரையைத் தாக்கிய மிகப்பெரிய கடல் அலை எழுச்சியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

கெர்மடெக் தீவுகளில் நான்காவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 அளவு அளவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி மதியம் 12:12 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Views: - 16

0

0