பிரபல இந்திப் பட பாடலை பாடி அசத்திய அமெரிக்க கடற்படை அதிகாரிகள்..! வைரலாகும் வீடியோ..!

Author: Sekar
29 March 2021, 12:47 pm
us_navy_updatenews360
Quick Share

அமெரிக்க கடற்படைத் தலைவர் மைக்கேல் எம் கில்டே மற்றும் இந்தியாவின் தூதர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோருக்கு இடையிலான இரவு விருந்தில் அமெரிக்க கடற்படை உறுப்பினர்கள் பிரபலமான இந்தி பாடலைப் பாடி அசத்திய வீடியோவை, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த விருந்தில், ஸ்வதேஸ் படத்திலிருந்து “யே ஜோ தேஷ் ஹை தேரா” எனும் பாடலை அமெரிக்க கடற்படை அதிகாரிகள் பாடும் வீடியோவை சந்து பகிர்ந்துள்ளார். 

வீடியோவை இணைத்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இது ஒரு நட்பின் பிணைப்பை உணர்த்துகிறது. அதை எப்போதும் உடைக்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் 2004’ஆம் ஆண்டு ஸ்வதேஸ் திரைப்படத்திற்காக இயற்றி பாடினார்.

கிளிப் அமெரிக்க கடற்படை இசைக்குழுவின் பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகள் வாசிப்பாளர்கள் குழுவினர் தங்கள் சீருடையை அணிந்துகொண்டு இந்த பாடலை பாடி அசத்தியுள்ளனர்.

மேலும் ஒரு தனி ட்வீட்டில், அற்புதமான மாலைப் பொழுதை வழங்கியதற்காக அமெரிக்க கடற்படைத்த தலைவர் அட்மிரல் கில்டேவுக்கு சந்து நன்றி தெரிவித்தார். இந்தியா-அமெரிக்க கூட்டணியை மேலும் வலுவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதை எதிர்பார்ப்பதாக சந்து குறிப்பிட்டுள்ளார்.

தனது செய்தியில், கடற்படை நடவடிக்கைகளின் தலைவர் அட்மிரல் மைக்கேல் எம் கில்டே, “இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் ஒரு சுதந்திர, திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒழுங்கை நாங்கள் ஊக்குவிப்போம். எங்கள் இரு கடற்படையினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 74

0

0