கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய எரிமலை: ஊருக்குள் புகுந்த சுனாமி…அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

Author: Aarthi Sivakumar
15 January 2022, 3:04 pm
Quick Share

நுலுலஃபா: கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன.

இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.

இந்நிலையில், அந்த தீவில் உள்ள எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது. சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன.

குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 641

0

0