ரூ.8.55 கோடி பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை தொலைத்த நபர்! அப்புறம் பாருங்க

Author: Poorni
25 March 2021, 9:45 am
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை, தவற விட்டிருக்கிறார். பதைபதைப்புடன் ஒரு மணி நேரம் தேடிய பின், கார் பார்க்கிங் பகுதியில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள டென்னஸியில் ஸ்பார்ட்டா பகுதியில் வசித்து வருபவர் நிக் ஸ்லாட்டன். கடந்த மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், இவர் வாங்கிய லாட்டரி எண்ணுக்கு 1,178,746 டாலர் பரிசு தொகை விழுந்திருக்கிறது. (இந்திய மதிப்பில் சுமார் 8.55 கோடி ரூபாய்). இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன அவர், இந்த மகிழ்ச்சியை தனது வருங்கால மனைவியிடம் பகிர்ந்து கொள்வதற்காக, அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்பு தன் சகோதரருடன் சேர்ந்து கார் ஸ்பேர் வாங்க ஒரு இடத்திற்கும், மதிய உணவுக்காக ஹோட்டல் ஒன்றிற்கும் சென்றிருக்கிறார். ஒரு நேரத்திற்கு பின், பாக்கெட்டில் வைத்த லாட்டரி டிக்கெட்டை எடுத்து பார்க்க எண்ணியவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அவரது பாக்கெட்டில் வைத்திருந்த டிக்கெட் காணாமல் போய்விட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

லாட்டரி விழுந்தவர்கள் டிக்கெட்டில் கையெழுத்து போடாமல் இருந்தால், அதற்கான பரிசு தொகையை, டிக்கெட் கையில் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். இதனால் பீதியடைந்த அவர், தான் சென்ற பகுதிகளுக்கு எல்லாம் சென்று தேடி பார்த்தார். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், அவரது லாட்டரி டிக்கெட்டை கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கண்டெடுத்தார். அப்போது தான் அவருக்கு போன உயிர் திரும்ப வந்திருக்கிறது.

நடந்த இந்த சம்பவம் குறித்து தெரிவித்த நிக், ‘வருங்கால மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழவும், வீடு வாங்கவும், தொழிலை மேம்படுத்தவும் இந்த பணம் எங்களுக்கு உதவி செய்யும்’ என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Views: - 168

0

0