பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை : தலிபான்களால் மீண்டும் பின்னோக்கி செல்லும் ஆப்கானிஸ்தான்..!!

By: Babu
9 September 2021, 8:13 pm
afghan cricket - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களிலும் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இடைக்கால அரசின் பிரதமராக முல்லா முகமது ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தலிபான்களின் ஆட்சியை விரும்பாத வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட தலிபான்கள், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களிலும் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலிபான்கள் பயங்கரவாத அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் கூறியதாவது :- விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்பது தேவையில்லாத ஒன்று. குறிப்பாக, கிரிக்கெட் விளையாடும் பெண்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காது. இப்போதுள்ள சூழலில் பெண்கள் எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல, எனக் கூறினார்.

தலிபான்களின் இந்த அறிவிப்பால் ஆப்கானிஸ்தான் மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாக உலகத் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேவேளையில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடனான கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

Views: - 284

0

0

Leave a Reply