கொரோனாவை விட உலகை ஆட்டிப்படைத்த மோசமான விஷயங்கள்: இதுபற்றி கேள்வி பட்டிருக்கீங்களா?…

21 December 2020, 1:15 pm
corona - updatenews360
Quick Share

2020 இந்த உலகம் முழுவதும் லாக்டவுணை சந்தித்து கொரோனாவிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த வருடம் உலகில் உள்ள பல மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த பள்ளி வகுப்புகள், வேலைகள், என எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டன. மக்கள் எல்லாம் பலவற்றை இந்த லாக்டவுணால் இழந்துவிட்டனர். இதையெல்லாம் பார்த்து இந்த வருடம்தான் மனித வரலாற்றிலேயே மிக மோசமாக வருடம் என நீங்கள் கருதியிருக்கலாம். ஆனால் இதைவிட மோசமான வருடங்கள் எல்லாம் இருந்துள்ளன அதைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

2020 கொரோனா:

2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸால் சுமார் 74 லட்சம் பேர் பதிக்கப்பட்டனர். 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுதான் உலகில் மிகப்பெரிய நோய் பரவல் என நீங்கள் கருதலாம். ஆனால் 1346ல் ஐரோப்பாவில் “பிளாக் டெத்” என்ற நோய் பரவி 200 மில்லியன் மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதே போல 1520ம் ஆண்டு சின்னம்மை நோய் அமெரிக்காவில் அதிகமாகப் பரவியது. இந்த நோய் அந்த கண்டத்தில் உள்ள 60 சதவீத மக்களைப் பாதித்தது. இதே போல 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ எனப்படும் நோய் பரவியது. இந்த நோய் 5 கோடி பேரின் உயிரை வாங்கியது. அப்பொழுது இது உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 3-5 விழுக்காடு எனக் கூறப்படுகிறது.

1980ம் ஆண்டிற்குப் பின்னர் தான் எய்ட்ஸ் என் வியாதி கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வியாதி கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதுவரை 3.2கோடி பேரின் உயிரைப் பறித்துள்ளது.

தற்போது கொரோனா பரவல் காரணமாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஆனால் உண்மையில் அதிகமாக வேலைவாய்ப்பின்மை எப்பொழுது இருந்தது தெரியுமா? 1929-1933 ஆண்டுகளில் உலகில் அதிகமான வேலையில்லாதவர்கள் இருந்துள்ளனர். ஒரு புள்ளி விவரப்படி 3ல் ஒருவருக்கு வேலையில்லாமல் இருந்தது அந்த நேரத்தில் தான்.

கி.பி536ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் திடீரென பனி/புகை மண்டலம் ஒன்று சூழ்ந்துள்ளது. இதனால் மக்களுக்குச் சூரியனும் வானமும் தெரியவேயில்லை. இந்த பனி மண்டலம் தொடர்ந்து 18 மாதங்கள் வரை இருந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிப்பட்டனர். சூரியன் தெரியாததால் பயிர்கள் வளரவில்லை. இதனால் அந்த நாடுகளில் கடும் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டது. இதற்கு ஐஸ்லாந்து அல்லது வட அமெரிக்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

இப்படி இந்த உலகம் கொரோனாவிட பல மோசமான விஷயங்களைச் சந்தித்து மீண்டு வந்துள்ளது. தற்போது கொரோனாவிலிருந்தும் மீண்டு வரும் என நாம் நம்புவோம்.

Views: - 1

0

0