இன்னும் 40 நாளில் பிரசவம்… குடும்ப பிரச்சனையால் 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு : திருச்சி அருகே நடந்த சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 5:01 pm
Pregnant Woman Suicide - Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திராநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் 28 வயதான மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா இந்திரா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான சங்கர் பாபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சங்கர் பாபு திருச்சி மாநகரில் பை தைக்கும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. 2 வதாக மஞ்சு பிரியாயை திருமணம் செய்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ந்தேதி மஞ்சு பிரியாவின் பாட்டி வெளியில் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இது குறித்து அவரது சகோதரர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் சம்பவத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மஞ்சு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Views: - 571

0

0